சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் தற்போது வீட்டுக் கண்காணிப்பில் 59, 918 பேரும், அரசு கண்காணிப்பு வசதியில் 213 பேரும் உள்ளனர்.
தமிழ்நாட்டில் மேலும் 96 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி!
17:08 April 09
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 96 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்புள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதுவரை ரத்த பரிசோதனை 7,267 பேருக்கு எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. 485 பேரின் ரத்த மாதிரி முடிவுகள் நிலுவையில் உள்ளன. 27 பேர் 28 நாள்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்புள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது” என்றார்.
மேலும், “மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட 1480 பேரில் 763 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 34 மாவட்டங்களில் 58 லட்சத்துக்கு 77 ஆயிரம் பேர் இதுவரை வீடு வீடாகச் சென்று கண்காணிக்கப்பட்டுள்ளனர். சீனாவிலிருந்து வரவுள்ள 50 ஆயிரம் நவீன பரிசோதனை கருவிகள், வல்லுநர் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் மருத்துவப் பயன்பாட்டிற்கு வரும்” என்றார்.
இதையும் படிங்க...ஊரடங்கு அமல் - விளைப்பொருள்களை நேரடியாகக் கொள்முதல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!