சென்னை: 2012 முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரிவரை அவதூறு பேச்சு, செய்தி வெளியீடுகளுக்காக தினசரி, வார பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர் உள்ளிட்டோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.
அவற்றில் தி இந்து நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் ஆசிரியர் மீது 5 வழக்குகளும், எக்கனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியர் மீது 1 வழக்கும், தினமலர் நாளிதழின் ஆசிரியர் மீது 12 வழக்குகளும், ஆனந்த விகடன் வார இதழின் ஆசிரியர் மீது 9 வழக்குகளும், ஜுனியர் விகடன் இதழின் ஆசிரியர் மீது 11 வழக்குகளும், நக்கீரன் இதழின் ஆசிரியர் மீது 23 வழக்குகளும், முரசொலி நாளிதழின் ஆசிரியர் மீது 17 வழக்குகளும், தினகரன் நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும் போடப்பட்டிருந்தன.
மேலும் புதிய தலைமுறை, நியூஸ் 7, சத்யம், கேப்டன், என்டிடிவி, டைம்ஸ் நவ், கலைஞர் உள்ளிட்ட தொலைக்காட்சிகளின் ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.