சென்னை: உடல் நலனைப் பேணிக் காக்கும் வகையில் காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக புதிய உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி நவம்பர் 16ஆம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது 7 மாநகராட்சிகளைக் கொண்ட பெருநகரங்கள் உள்பட 38 மாவட்டங்களுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு மாவட்டத்துக்கு 1 லட்சத்து 98 ஆயிரத்து 576 ரூபாய் வீதம் மொத்தமாக 89 லட்சத்து 35 ஆயிரத்து 920 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.