தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்த, இன்று முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் செயல்படும் நேரம் மாற்றப்பட்டது. இதைவிட்டா இனி குடிக்க முடியாதென டாஸ்மாக் நோக்கி மதுப்பிரியர்கள் படையெடுக்கத் தொடங்கினர். பலர் சரக்குகளை வாங்கி குவிக்கத் தொடங்கினர். இதனால், மதுவிற்பனை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை படு ஜோராக நடைபெற்றது. பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கினர்.
டாஸ்மாக்கிற்குப் படையெடுத்த மதுப்பிரியர்கள் - இரண்டு நாளில் ரூ. 854 கோடி வசூல்!
முழு ஊரடங்கு அறிவிப்பை முன்னிட்டு, கடந்த இரண்டு நாள்களில் மட்டும் ரூ.854 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
மக்களின் கூட்டத்தை கட்டுபடுத்த காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நேற்றைய தினம் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ₹98.96 கோடி ரூபாயும், மதுரை மண்டலத்தில் ₹97.62கோடி ரூபாயும், திருச்சி மண்டலத்தில் ₹87.65 கோடிக்கும், சேலம் மண்லடத்தில் ₹76.57 கோடி ரூபாயக்கும், கோவை மண்டலத்தில் ₹67.89 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சனிக்கிழமை மட்டும் ரூ. 426 கோடிக்கும், ஞாயிறு அன்று ரூ. 428 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது. எனவே, கடந்த இரண்டு நாள்களில் 854 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.