தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வேலூரில் 850 வாக்குச்சாவடிகள் வெப் கேமராவில் கண்காணிப்பு' - சத்ய பிரதா சாகு - வேலூர் தொகுதி

சென்னை: வேலுார் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி 850 வாக்குச்சாவடிகளை வெப் கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

sathyaprathasahoo

By

Published : Jul 22, 2019, 4:09 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூலை 18ஆம் தேதி வரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்களின் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர் பெயர்கள் அடங்கிய துணை வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். வேலுார் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 10 கம்பெனி துணை ராணுவம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளது.

வேலுாரில் மொத்தமுள்ள 1,553 வாக்குச்சாவடிகளில், 850 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும். 179 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வேலூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.89. 41லட்சம் மதிப்புள்ள 2.98 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details