சென்னை: பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இரண்டு வாரக் காலத்தில் 430 மாட்டு உரிமையாளர்களுக்கு ரூ.8,60,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.
உரிமையாளர்களுக்கு பிடிக்கப்பட்ட மாடுகளை இரண்டு நாட்களுக்கு பராமரிக்கும் செலவினத்துடன் அபராதத் தொகையாக ரூ.2,000/- விதிக்கப்படுகிறது.