ரயில்களில் உள்ள கழிப்பறைகள், திறந்தவெளி கழிப்பறை வடிவில் பயன்படுத்தப்படுவதை மாற்றி, புதிய பயோ டாய்லெட் அமைக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூல ரயில்களில் பயணம் செய்யும்போது மனிதக் கழிவுகள் தண்டவாளங்களில் வெளியேறுவது தடுக்கப்படுகிறது.
பயோ டாய்லெட்
தென்னக ரயில்வேயின், 100 விழுக்காடு பெட்டிகளிலும் பயோ டாய்லெட் வசதி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வேயின்கீழ் இயங்கும் ரயில்களில் உள்ள ஏழாயிரத்து 24 ரயில் பெட்டிகளில் பயோ டாய்லெட் வசதி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிவறைகளில் தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், காற்று அழுத்தம் மூலமாக கழிவறையை தூய்மையாக்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டு வருதாக கூடுதல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இரண்டு நாட்களில் கோவின் தளத்தில் 'தமிழ்'