சென்னை அடையாறு மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டை காவேரி நகர் 1வது தெருவில் 24, 25ஆம் எண் கொண்ட ரேசன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேசன் கடையில் 1,784 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியான 2,000 ரூபாயை, கடந்த 15ஆம் தேதியிலிருந்து ரேசன் கடை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.
ரேசன் கடையில் 7.36 லட்சம் ரூபாய் கொள்ளை! - 7.36 lakh robbery at ration shop
சென்னை: கரோனா நிவாரண நிதிக்காக வைத்திருந்த 7.36 லட்ச ரூபாய் பணத்தை ரேசன் கடையை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று (மே.16) வழக்கம் போல் ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு நிவாரண தொகையை வழங்கிவிட்டு 24ஆம் எண் கடையில் 7.36 லட்ச ரூபாய் பணத்தை வைத்து கடையை மூடிவிட்டு சென்றனர்.
இந்நிலையில், இன்று (மே.17) காலை 8 மணியளவில் கடையின் மேற்பார்வையாளரான குணசேகரன் கடையை திறக்க வரும்போது 24ஆம் எண் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர், உள்ளே சென்று பார்க்கும்போது கரோனா நிவாரண நிதி தொகையான 7.36 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் கரோனா நிவாரண தொகை வாங்க வந்த ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். பின்னர், குடிமை பொருள் அலுவலர்கள் வேறு இடத்திலிருந்து பணத்தை கொண்டு வந்து பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதுகுறித்து, ரேசன் கடை மேற்பார்வையாளரான குணசேகரன் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரெம்டெசிவிர் நேரு ஸ்டேடியத்தில் வழங்கப்படமாட்டாது - காவல் துறை