தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 am - etv bharat tamil top 10 news

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்

7-am-top-10-news-update
7-am-top-10-news-update

By

Published : May 18, 2020, 6:58 AM IST

ஊரடங்கு 4.0 - மத்திய அரசின் புதிய விதிமுறைகள் என்னென்ன?

டெல்லி: கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 3ஆம் கட்ட ஊரடங்கு இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், மே 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடியின் முழு விவரம்

டெல்லி: பிரதமர் மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ. 20 லட்சம் கோடி தொகையின் முழு விவரத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 500 பேருந்துகள் ஏற்பாடு - பிரியங்கா காந்தி!

டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல 500 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

அந்நிய நேரடி முதலீட்டின் வரம்பு உயர்வு; ராணுவம் பலம்பெறும்: ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள் தயாரிப்பில் அந்நிய நேரடி முதலீடு 74 விழுக்காடு அதிகரிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது இந்தியாவின் ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ரூ. 20 லட்சம் கோடியில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் என்ன? கமல்ஹாசன் கேள்வி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து கட்டங்களாக நாட்டு மக்களுக்கும், தொழில்துறையினருக்குமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு ரூ. 20 லட்சம் கோடியில் நேரடி பயன் என்ன என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மதுரையில் பெண் சிசுக்கொலை: காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை

மதுரை: சோழவந்தானில் 4 நாள்கள் ஆன பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி தந்தையே கொன்று புதைத்து நாடகமாடியதையடுத்து தந்தை, பாட்டி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட டென்னிஸ் வீரர்கள்!

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர்களான அங்கிதா ரெய்னா, திவிஜ் சரண் ஆகியோரை, அர்ஜூனா விருதிற்காக இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

புது லுக்கில் வியக்கவைக்கும் மகேஷ் பாபு!

ஊரடங்கில் வீட்டில் இருக்கும் மகேஷ் பாபுவின் புது லுக் தற்போது ரசிகர்களால் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

தேவையில்லாத பதிவுகளை கட்டுப்படுத்த புதிய அம்சங்களை செயல்படுத்துகிறது இன்ஸ்டாகிராம்!

பயனர்கள் இலகுவாக தங்கள் தளத்தை பயன்படுத்த சில புதிய அம்சங்களை உட்புகுத்தியுள்ளது இன்ஸ்டாகிராம். இதன் மூலம் தேவையில்லாத பதிவுகள் கட்டுப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்காசிய பிரதிநிதிகளுடன் உலக சுகாதார அமைப்பின் தலைவர் கலந்துரையாடல்!

ஜெனீவா : உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றாக செயலாற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் முன்வர வேண்டுமென உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய தலைவர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details