தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு - தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவு! - Directorate of Technical Education

பொறியியல் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு
பொறியியல் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு

By

Published : Oct 4, 2021, 4:25 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் முதல் முறையாக தொழிற்கல்விப் படிப்புகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்த 50 மாணவர்களுக்கு கடந்த செப்.20 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணைகளை வழங்கினார்.

5,972 மாணவர்கள்

அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், "இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், சேர்க்கை கட்டணத்தை உள்ளிட்டவற்றை அரசே ஏற்கும்" என அறிவித்தார்.

பொறியியல் படிப்பில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 5 ஆயிரத்து 972 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசுக் கல்லூரிகள் மட்டுமல்லாமல் தனியார் பொறியியல் கல்லூரியிலும் இடங்களை தேர்வுச் செய்தனர். கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்த போதும் அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் தனியார் கல்லூரியில் சேர சென்ற மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகங்கள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

கட்டணம் வசூலிக்க கூடாது

இதையடுத்து இன்று (அக்.4) தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பி உள்ள உத்தரவில், 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. தங்கள் கல்லூரியை தேர்ந்தெடுத்த மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த தொழில்நுட்ப கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா, "மாணவர்கள் தங்களிடம் புகார் கூறினால், சம்பந்தப்பட்ட கல்லூரியை தொடர்பு கொண்டு கட்டணம் வசூலிக்கக் கூடாது" எனக் கூறி வருகிறோம் என்றார்.

இதையும் படிங்க: Operation Tiger T23 - 10ஆவது நாளாக ஆட்கொல்லி புலியைத் தேடும் பணிகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details