தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று கேள்வி நேரத்தில் போது திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ‘தமிழக மாணவர்களின் நலனுக்கு எதிரான மத்திய அரசின் நீட் தேர்வு தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது தாமதமாகி வருகிறது. மத்திய அரசு திட்டமிட்டு தாமதப்படுத்தி வருகிறது. மத்திய அரசு 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற தூண்டிலை வீசி முன்னோட்டம் பார்க்கிறது. மேலும் உயர் ஜாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளும் கட்சியின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த விவகாரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
69சதவீத இடஒதுக்கீடு எந்த நிலையிலும் மாற்றப்படாது - முதலமைச்சர் திட்டவட்டம் - 69% reservation
சென்னை: தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் என்றும், அதிலிருந்து எந்த நிலையிலும் அதிமுக அரசு பின்வாங்காது என, சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர்
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எந்த நிலையிலும் தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும். எக்காரணத்தை கொண்டும் இதில் அதிமுக அரசு பின்வாங்காது. மேலும் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டு விவகாரம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து கருத்துகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.