தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. மேலும் புதிதாக 6 ஆயிரத்து 618 நபர்களுக்கும், சென்னையில் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 124 நபர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் குறைந்தபட்சமாக 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் 87 ஆயிரத்து 767 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வு துறை ஏப்ரல் 11ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 87 ஆயிரத்து 767 நபர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் மாநிலத்தில் இருந்த 6 ஆயிரத்து 583 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த நான்கு நபர்களுக்கும், ஓமனில் இருந்து வந்த ஒருவருக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த ஒன்பது பேருக்கும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் இருந்து வந்த தலா 5 நபர்களுக்கும், பிகார் ஜார்காண்ட் கர்நாடகா வங்கதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த தலா இரண்டு நபர்களுக்கும், அசாம் பீகார் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என 6,618 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 603 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் ஒன்பது லட்சத்து 33 ஆயிரத்து 434 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது தெரியவந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 41 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 2314 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 571 என உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 14 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 8 நோயாளிகளும் என மேலும் 22 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 908 என உயர்ந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 2,65,126
கோயம்புத்தூர் - 63197
செங்கல்பட்டு - 60792
திருவள்ளூர் - 48200
சேலம் - 34460
காஞ்சிபுரம் - 31943
கடலூர் - 26,559
மதுரை - 22986
வேலூர் - 22201
தஞ்சாவூர் - 21158
திருவண்ணாமலை - 20194
திருப்பூர் - 20639
கன்னியாகுமரி - 18082
தேனி - 17548
விருதுநகர் - 17152
தூத்துக்குடி - 17099
ராணிப்பேட்டை - 16959