சென்னை:இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரின் காரணமாக ஏராளமான ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். இலங்கை நாட்டில் இருந்து வரக்கூடிய அகதிகளுக்காக தமிழ்நாட்டில் 109 அகதிகள் முகாம்கள் உள்ளன. அவற்றில், அவர்கள் தங்க வைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இந்திய அரசால் செய்து கொடுக்கப்பட்டுவருகிறது. தற்போதைய நிலவரப்படி 109 முகாம்களில் 65ஆயிரம் அகதிகள் உள்ளனர்.
தென்மாவட்டங்களில் உள்ள முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகள் 64 பேர் கடந்த செப்டம்பர் மாதம், முதல் வாரத்தில் கேரளா சென்று சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்திய பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கியதாகவும், அந்தப்படகின் மூலமாக இலங்கை கடற்பரப்பில் சென்று அங்கு மேலும் 20 இலங்கைத் தமிழர்களை ஏற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.
மொத்தம் 84 அகதிகள் இலங்கை கடற்பரப்பில் இருந்து மாலத்தீவு வழியாக தென்னாப்பிரிக்கா சென்று இறுதியாக கனடா சென்று தஞ்சமடைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாலத்தீவு, மொரிஷியஸ் நாடுகளுக்கு இடையேயான கடற்பரப்பில் இவர்கள் சென்ற படகு மோசமான வானிலை காரணமாக சிக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முறையான தகவலோ அள்லது இவர்களை கைது செய்ததாகவோ மாலத்தீவு தரப்பில் இருந்து தெளிவாக பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்க படையிடம் சிக்கியுள்ளார்களா?