தூபாய், இலங்கை நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், பயணிகள் உள்ளாடைகள், பழைய மடிகணினிகளில் தங்கம் மறைத்து கடத்தியது தெரியவந்தது. இந்த சோதனையில் சுமார் ரூ.61.05 லட்சம் மதிப்புடைய 1.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை விமானநிலையத்தில் பயணிகளிடம் இருந்து 1.8கிலோ தங்கம் பறிமுதல் - airport
சென்னை: துபாய், இலங்கை நாடுகளிலிருந்து விமானங்கள் முலம் சென்னைக்கு கடத்தி வந்த ரூ.61. 5 லட்சம் மதிப்புள்ள 1.8 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ. 61 லட்சம் தங்கம் பறிமுதல்- 4 பேர் கைது
பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ராமநாதபுரத்தை சோ்ந்த சாகுல் அமீது (37), சையத் அபுபக்கா்(34), சுக்கூா் (33), கும்பகோணத்தை சோ்ந்த முகமது தன்வீா்(24) என்பது தெரியவந்தது. அவர்களிடம் சுங்கத்துறை அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.