தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9AM - தமிழ்நாட்டில் இன்றைய முக்கியச் செய்திகள்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9AM
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9AM

By

Published : Jun 5, 2020, 7:00 AM IST

Updated : Jun 5, 2020, 9:38 AM IST

1.சர்வதேச தடுப்பூசி கூட்டணிக்கு 15 மில்லியன் டாலர் அளிக்க நரேந்திர மோடி உறுதி!

இங்கிலாந்து நடத்திய உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாட்டில் தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளுக்கான உலகளாவிய கூட்டணிக்கு (GAVI) இந்தியாவின் பங்களிப்பாக 15 மில்லியன் அமெரிக்க டாலர் அளிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

2.'குழந்தை தொழிலாளர்களுக்கு நீதி மறுப்பு'- வழக்குரைஞர் ஆதங்கம்

மதுரையில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளரும் வழக்குரைஞருமான ஃபிலோமின் ராஜ் என்பவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

3.கரோனா ஊரடங்கால் லிச்சி பழ விவசாயிகள் கடும் பாதிப்பு

கரோனா ஊரடங்கு காரணமாக லிச்சி பழ உற்பத்தி விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

4.“நாராயணசாமிக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள்”- கொதிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.!

முதலமைச்சர் நாராயணசாமிக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள் என ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. கூறியுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5.வட்டிக்கு சலுகையா? இல்லை வட்டிக்கு வட்டியா? கேள்வியெழுப்பும் உச்ச நீதிமன்றம்

வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கு வட்டி செலுத்துவதை தள்ளுபடி செய்தால், வங்கிகளுக்கு 2.10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

6.'வந்தே பாரத் விமான சேவைகளுக்கு தடைவிதிக்கவில்லை' - பினராயி விஜயன்

கேரளாவில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயங்கும் விமான சேவைகளுக்கு தடையோ அல்லது கட்டுப்பாடுகளையோ விதிக்கவில்லை என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

7.ஊரடங்கு விதிமீறல்: பாஜக பெண் எம்.பி.க்கு அபராதம்!

கரோனா தடுப்பு ஊரடங்கு விதிமுறைகளை மீறிய பாஜக பெண் எம்.பி.க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

8.பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து: ஆளுநரின் கோரிக்கையை நிராகரித்த உத்தவ் தாக்ரே!

சிவசேனா கூட்டணி அரசு ரத்து செய்த பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்தவேண்டும் என அம்மாநில ஆளுநர் கோரியதை, அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரே நிராகரித்தார்.

9.'சீனப் பொருள்களை நிராகரிப்போம்'- பொதுமக்களிடம் சி.ஆர்.பி.எஃப். வீரர் வேண்டுகோள்!

“சீனப் பொருள்களை நிராகரிப்போம்,” என்று சி.ஆர்.பி.எஃப். வீரர் ஒருவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவிவருகிறது.

10.உலகின் சிறந்த யார்க்கர் பவுலர் மலிங்கா தான்: பும்ரா!

உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் இலங்கை அணியின் மலிங்கா தான் என இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.

Last Updated : Jun 5, 2020, 9:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details