தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 580 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு!

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை

By

Published : May 7, 2020, 6:12 PM IST

Updated : May 7, 2020, 8:03 PM IST

18:08 May 07

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 580 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5409ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், 'தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் பரிசோதனை மையங்கள் 52இல் இதுவரை 2 லட்சத்து 2 ஆயிரத்து 436 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

அவர்களில் 5,409 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த ஆயிரத்து 547 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில், 3822 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

இதில் இன்று 14 ஆயிரத்து 195 பேருக்கு பரிசோதனை செய்ததில், 580 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனா புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில், அரியலூர் மாவட்டத்தில் 24 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 13 பேரும், சென்னை மாவட்டத்தில் 316 பேரும், கடலூர் மாவட்டத்தில் 32பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருவரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 பேரும், கரூர் மாவட்டத்தில் 2 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 33 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 பேரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 63 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 3 பேரும், திருச்சி மாவட்டத்தில் 5 பேரும், வேலூர் மாவட்டத்தில் ஒருவரும், விழுப்புரம் மாவட்டத்தில் 45 பேரும் என மொத்தம் 580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 56 வயது பெண்ணும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 48 வயது பெண்ணும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் ஈரோடு, சிவகங்கை மாவட்டங்களில் மட்டும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் சிகிச்சையில் தற்போது இல்லை. மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்!

  • சென்னை : 2644
  • கடலூர் : 356
  • அரியலூர் : 246
  • விழுப்புரம் : 205
  • திருவள்ளூர் : 192
  • செங்கல்பட்டு : 158
  • கோயம்புத்தூர் : 146
  • திருப்பூர் : 112
  • மதுரை : 111
  • திண்டுக்கல் : 107
  • காஞ்சிபுரம் : 89
  • பெரம்பலூர் : 77
  • நாமக்கல் : 76
  • ஈரோடு : 70
  • திருநெல்வேலி : 68
  • தஞ்சாவூர் : 65
  • திருச்சிராப்பள்ளி : 62
  • திருவண்ணாமலை : 59
  • கள்ளக்குறிச்சி : 58
  • தேனி : 54
  • தென்காசி : 51
  • ராணிப்பேட்டை : 50
  • நாகப்பட்டினம் : 45
  • கரூர் : 47
  • விருதுநகர் : 35
  • சேலம் : 35
  • திருவாரூர் : 32
  • தூத்துக்குடி : 30
  • வேலூர் : 29
  • ராமநாதபுரம் : 23
  • திருப்பத்தூர் : 22
  • கன்னியாகுமரி : 17
  • நீலகிரி : 13
  • சிவகங்கை : 12
  • கிருஷ்ணகிரி : 8
  • புதுக்கோட்டை : 5
  • தருமபுரி : 2 பேரும் எனப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 12 வயதுக்குட்பட்ட 273 பேருக்கும், 60 வயதுக்குட்பட்ட 4 ஆயிரத்து 743 பேருக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட 393 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...விபத்து ஏற்பட்ட விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலை யாருடையது?

Last Updated : May 7, 2020, 8:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details