துபாய், அபுதாபி, சிங்கப்பூா் ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனைகளில் 13 பெண்கள் உள்பட 56 பேருக்கு கரோனா அறிகுறி இருப்பதாக, கண்டறிதல் சோதனையில் தெரியவந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக் குழுவினா் அவர்களை வெளியில் அனுப்ப மறுத்துவிட்டனா்.
சென்னை வந்த 56 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கோவிட்-19 அறிகுறி
சென்னை: சென்னை வந்த 56 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கோவிட்-19 அறிகுறி உள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சென்னை வந்த 56 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கோவிட்-19 அறிகுறி
இதையடுத்து, சிறப்பு மருத்துவக் குழுவினர் 13 பெண்கள் உள்பட 56 பேரையும், 24 மணி நேரம் கண்காணிப்பிற்காக தாம்பரம் சானடோரியம் சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். இவா்களில் பலா் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும், ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தங்கள் மகன், மகள்களோடு ஒரிரு மாதங்கள் தங்கியிருந்துவிட்டு, தாயகம் திரும்பியவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா: ஒரேநாளில் 84 சர்வதேச விமானங்களின் சேவை ரத்து