சென்னை, ராயப்பேட்டை, நியூ கல்லூரி அருகே தேர்தல் பறக்கும் படை காவலர்கள் இன்று (மார்ச்.18) மாலை வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற வேனை மடக்கி காவல் துறையினர் சோதனை செய்தபோது, அதில் 55 லட்ச ரூபாய் பணமும் துப்பாக்கியும் இருந்தது தெரிய வந்தது.
பறக்கும் படை கைப்பற்றிய பணம், துப்பாக்கி: உரிய ஆவணங்களைக் காண்பித்தவுடன் மீண்டும் ஒப்படைப்பு - பணம் துப்பாக்கி கைப்பற்றிய பறக்கும் படை
சென்னை: ராயப்பேட்டை, நியூ கல்லூரி அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று (மார்ச். 18) வாகன சோதனையில் ஈடுபட்டு, கைப்பற்றிய 55 லட்சம் ரூபாய் பணம், துப்பாக்கியை உரிய ஆவணங்களைக் காண்பித்தவுடன் அதை அவர்களிடமே ஒப்படைத்தனர்.
சென்னை பறக்கும் படையினர்
தொடர்ந்து இது குறித்து ஓட்டுநரிடம் விசாரித்தபோது, ஏடிஎம்களில் பணம் நிரப்ப கொண்டு செல்வதாகவும், பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பணம், துப்பாக்கிக்கு உண்டான ஆவணங்களையும் அவர் எடுத்துவந்து காண்பித்தவுடன் பறிமுதல் செய்த பணம், துப்பாக்கியை ஒப்படைத்தனர்.