தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாடுகளிலிருந்து சென்னை வந்த ஆக்ஸிஜன் தயாரிக்கும் 52 கருவிகள் - chennai news

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆக்ஸிஜன் தயாரிக்கும் 52 கருவிகள் 3 சரக்கு விமானங்களில் சென்னை வந்தடைந்தன.

வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் 52 கருவிகள் 3 சரக்கு விமானங்களில் சென்னை வந்தன!
வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் 52 கருவிகள் 3 சரக்கு விமானங்களில் சென்னை வந்தன!

By

Published : May 18, 2021, 3:10 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸின் இரண்டாம் அலை பெருமளவில் பரவி வருகிறது. இதனால், அனைத்து இடங்களிலும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சா் ஸ்டாலின் உத்தரவின்பேரில், தமிழ்நாடு அரசு ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பதிலும், வெளி நாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன் கொண்டு வருவதிலும் போா்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அத்தோடு, வெளிநாடுகளிலிருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளும் பெருமளவு தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், நேற்று (மே.17) இரவு அமெரிக்கா, சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து சென்னை வந்த 3 சரக்கு விமானங்களில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் 52 கருவிகள் சென்னை விமானநிலையத்தில் வந்து இறங்கின. மேலும், சீனா, அமெரிக்கா, ஹாங்காங்கிலிருந்து வந்த இரண்டு சரக்கு விமானங்களில் 51 ஆக்ஸிஜன் தயாரிக்கும் கருவிகள், சென்னை விமானநிலைய சரக்ககப் பகுதியில் வந்திறங்கின.

சென்னை விமானநிலைய சுங்க அதிகாரிகள், அந்த கருவிகள் அடங்கிய பாா்சல்களுக்கு முன்னுரிமை வழங்கி, உடனடியாக சுங்கச் சோதனைகள் முடித்து டெலிவரி கொடுத்து அனுப்பினா். அதைப்போல் நேற்று நள்ளிரவு அமெரிக்காவிலிருந்து வந்த சரக்கு விமானத்தில் வந்த ஒரு ஆக்ஸிஜன் தயாரிக்கும் கருவியையும் சுங்கத்துறையினா் சோதனை முடித்து உடனடியாக டெலிவரி கொடுத்தனுப்பினா்.

சென்னைக்கு நேற்றிரவு மட்டும் அமெரிக்கா, ஹாங்காங், சீனாவிலிருந்து 52 ஆக்ஸிஜன் தயாரிக்கும் கருவிகள் வந்துள்ளன. அடுத்த சில நாட்களில் மேலும் பல கருவிகள் வெளிநாடுகளிலிருந்து வரவிருப்பதாகக் கூறப்படுகிறது

இதையும் படிங்க : பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கையை கொடுக்கும் தன்னார்வலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details