கத்தாா் நாட்டின் தோகா நகரிலிருந்து 171 இந்தியர்களுடன் சிறப்பு மீட்பு விமானம் சென்னை வந்தது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், குடியுரிமை, சுங்க சோதனை ஆகியவை நடத்தப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவர்களில் அரசின் இலவச தங்குமிடங்களுக்கு 111 பேரும், கட்டணம் செலுத்தும் தங்குமிடங்களான ஹோட்டல்களுக்கு 60 பேரும் அனுப்பப்பட்டனா்.
அதேபோல், சாா்ஜாவிலிருந்து 180 இந்தியர்களை மீட்டுவந்த சிறப்பு விமானம் சென்னை வந்தது. இதனையடுத்து அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை, குடியுரிமை, சுங்க சோதனைகள் அனைத்தும் முடிந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவர்களில் அரசின் இலவச தங்குமிடங்களான விஐடிக்கு 125 பேரும், கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஹோட்டல்களுக்கு 50 பேரும், அரசின் சிறப்பு அனுமதி பெற்று ஐந்து போ் ஆவடிக்கும் வாகனத்தில் அனுப்பப்பட்டனா்.
அமெரிக்காவின் சிக்காகோ நகரிலிருந்து 70 இந்தியா்களுடன் சிறப்பு மீட்பு விமானம் சென்னை வந்தது. இவர்களுக்கான பரிசோதனைகள் முடித்து அரசின் இலவச தங்குமிடங்கள் யாரும் கேட்காததால் 70 பேரும் ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டனா்.
சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட 517 பேர்
சென்னை: அமெரிக்கா, சாா்ஜா, அபுதாபி, கத்தாா் ஆகிய நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியா்களில் 517 போ் மீட்கப்பட்டு, நான்கு சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
517 people brought to Chennai by a special flight