தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பச்சைக்கல் லிங்கம் பறிமுதல்-500 ஆண்டு பழமையானதா என ஆய்வு

சென்னையில் 500 ஆண்டுகள் பழமையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்க சிலையை , தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பச்சைக் கல்
பச்சைக் கல்

By

Published : May 17, 2022, 3:49 PM IST

சென்னை:பூந்தமல்லி அருகே 500 ஆண்டுகள் பழமையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக் கல் லிங்க சிலை ஒன்று கடத்தப்பட உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் , சிலையை வாங்குவது போன்று கடத்தல்காரர்களிடம் நடித்துள்ளனர்.

ரூ 25 கோடிக்கு பேரம்: சுமார் 25 கோடி ரூபாய்க்கு பேரம் பேசி , கடத்தல்காரர்கள் பணத்தை வாங்க வந்த போது போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து சிலையை மீட்டனர். விசாரணையில் , அவர்கள் வெள்ளவேடு புது காலனியை சேர்ந்த பாலா மற்றும் புதுச்சத்திரம் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாக்யராஜ் என்பது தெரியவந்தது.

லிங்க சிலையை கடத்திய இருவர் கைது

மீட்கபட்ட சிலையானது கருடாழ்வாருடன் சுமார் 29 செமீ உயரம், 18 செமீ அகலம் கொண்ட 9 கிலோ 800 பச்சைக்கல் லிங்கம் என்றும் அது 500 ஆண்டுகள் பழமையானது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. லிங்கத்தின் கீழே சிவபெருமானின் ஐந்து முகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது எனவும் இது நேபாள பாணியில் உருவானது எனவும் சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தஞ்சாவூரில் பழமையான நடராஜர் சிலையை விற்க முயன்ற மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details