சென்னை:அரசு கட்டிடங்கள், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள 49,500 அரசு கட்டிடங்களில் 26,769 கட்டிடங்களில் நுழைவு வாயில்களில் சாய்தளம் மற்றும் கைப்பிடி அமைக்கப்பட்டுள்ளது.
21,063 கட்டிடங்களில் மாற்றுத் திறானாளிகள் செல்லக்கூடிய வகையில் வாகன வசதிகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் அமைக்கபட்டுள்ளது.
வசதிகள்
அதேபோல், 1,029 கட்டிடங்களில் பிரெய்லி முறையில் லிப்டுகள் அமைக்கபட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் 54 விழுக்காடு மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2017ஆம் ஆண்டு கொண்டுவருவதற்கு முன்பு உள்ள 45 விழுக்காடு கட்டிடங்களைபொறுத்தவரை, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவண்ணம் வசதிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.