தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5.8 லட்சம் தடுப்பூசிகள் நாளை தமிழ்நாடு வருகை - சுகாதாரத்துறை செயலர் தகவல் - corona vaccine

சென்னை: தமிழ்நாட்டிற்கு 5 லட்சத்து 8 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நாளை (ஜனவரி 20) வர இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

செயலாளர்
செயலாளர்

By

Published : Jan 19, 2021, 1:17 PM IST

சென்னை அரசு பொது மருத்துவமனையில், கரோனா தடுப்பூசி போடப்படும் மையத்தை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி தாமதமாக துவங்கினாலும், சீரான முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. நேற்று (ஜனவரி 18) ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 16 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நாளை 5 லட்சத்து 8 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகிறது" எனத் தெரிவித்தார்

ABOUT THE AUTHOR

...view details