சென்னை: தமிழ்நாட்டில் தற்போது கரோனா இரண்டாம் அலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகள் அறிவுறுத்துகின்றன.
மக்களும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள அதிக அளவில் ஆர்வம் காட்டுவதால், தமிழ்நாட்டுக்கு அதிக அளவு தடுப்பூசிகளை வழங்கும்படி அரசு கோரிக்கை விடுத்தது.
விமானத்தில் வந்திறங்கிய கரோனா தடுப்பூசிகள் விமானத்தில் வந்திறங்கிய தடுப்பூசிகள்
இந்நிலையில் இன்று (செப்.15) விமானம் மூலமாக, புனேவில் இருந்து நான்கு லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகளும், ஹைதராபாத்தில் இருந்து ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 250 கோவேக்சின் தடுப்பூசிகளும் சென்னை வந்தடைந்தன.
அவற்றைப் பெற்றுக் கொண்ட மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள், குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்புக் கிடங்குக்கு கொண்டு சென்றனர். தடுப்பூசிகள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:இந்தியாவில் மீண்டும் 25 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு