சென்னை:தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில், கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பின்னர் 2021-ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்றின் காரணமாக மெய்நிகர்( Virtual Reality) மாரத்தானாக நடத்தப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த மாரத்தான் போட்டிக்கானப் பதிவுக் கட்டணமாகப் பெறப்பட்ட ரூபாய் 23.42 லட்சத்தை, அன்றைய ஆளும் அதிமுக அரசிடம் பேரிடர் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டிலும் மெய்நிகர் மாரத்தானாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது பெறப்பட்ட ரூபாய்.56.03 லட்சம், கரோனா பேரிடர் நிவாரண நிதியாக முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது என்று அண்மையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.
நாளை நடைபெறும் மாரத்தான் போட்டி: இந்நிலையில், இந்த ஆண்டு சர்வதேச கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் போட்டி சென்னையில் நாளை(ஆக.6) அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது. உலகிலேயே முதல்முறையாக திருநங்கைகள் 1,063 பேர் உட்பட மொத்தம் 73,206 பேர் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். முதல்முறையாக ஒரே நேரத்தில் லாங்கஸ்ட் ரன்னிங் சீரிஸ் (Longest Running Series) என்ற பெயரில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் 9 பிரிவுகளாக மொத்தம் ரூ.10.70 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு uள்ளது. பரிசு வழங்கும் விழாவில் முதலமைச்சர் உடன் பல்வேறு நாடுகளின் தூதர்களும் பங்கேற்க உள்ளனர்.