சென்னை அண்ணாநகரின் ஐந்தாவது பிரதான சாலையில் கிங்மேக்கர் என்ற பெயரில் தனியார் ஐஏஎஸ் அகாதெமி பயிற்சி நிறுவனத்தை பூமிநாதன் என்பவர் நடத்திவருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி காலை 8 மணியளவில் தனது காரில் ஓட்டுநர் பாபு என்பவருடன் தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள உணவகத்திற்கு சென்று சிற்றுண்டி சாப்பிட்ட சென்றுள்ளார்.
தனியார் ஐஏஎஸ் அகாதெமியில் ரூ.4 லட்சம் பணம் திருட்டு! - ஐஏஎஸ் அகாடெமி
சென்னை: தனியார் ஐஏஎஸ் அகாதெமியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக அதன் நிறுவனர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Anna Nagar
இதையடுத்து பிறகு காரின் பையில் வைத்திருந்த ரூ.20 லட்சம் பணத்தை ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தின் லாக்கரில் வைத்ததாகவும், பிறகு 18ஆம் தேதி இரவு லாக்கரைத் திறந்து பார்த்தபோது, அதில் நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் காணவில்லை என்பதும் தெரியவந்ததாகவும், இதன் பின்னர் அண்ணாநகர் காவல் துறையினரிடம் இது குறித்து நிறுவனர் புகார் தெரிவித்துள்ளார்.