திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாப்பட்டது. அதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல், அதன் சிகிச்சைக்கான தேசிய சுகாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ரமணி ராஜேந்திரன் கலந்துகொண்டார். அவருடன் மார்பகம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்கள், நிபுணர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பெண்களை அதிகம் பாதிக்கும் மார்பக புற்றுநோய், கருப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உணவு மாற்றத்தால் 49 விழுக்காடு பெண்களுக்கு மார்பக புற்றுநோய்!
திருவள்ளூர்: உணவு மாற்றத்தால் லட்சம் பெண்களில், 49 விழுக்காடு பேருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு உள்ளதாக, தேசிய சுகாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ரமணி ராஜேந்திரன் அதிர்ச்சி தகவல் தெரிவித்தார்.
குறிப்பாக அவற்றை எவ்வாறு வராமல் தடுப்பது, பாதிக்கப்பட்ட பின் எப்படி சிகிச்சை பெறுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரமணி ராஜேந்திரன் உள்ளிட்ட மருத்துவர்கள், இந்தியாவில் நாள்தோறும் மார்பக புற்றுநோய் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் உணவு பழக்க மாற்றம். சராசரியாக மார்பக புற்றுநோய் பாதிப்பு ஒரு லட்சத்தில் 49 விழுக்காடு பெண்களுக்கு உள்ளது. அதனை தடுக்க ஒவ்வொரு மகளிரும் மார்பக பரிசோதனை செய்வதோடு, உணவு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க:பால் அதிகம் அருந்தினால் மார்பகப் புற்றுநோய் வருமாம்!