தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஒரேநாளில் 449 மருத்துவ முகாம்கள் - சென்னை மாநகராட்சி ஆணையம்

சென்னை: மாநகராட்சி முழுவதும் இன்று (செப்டம்பர் 5) ஒரேநாளில் 449 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது.

மருத்துவ முகாம்
மருத்துவ முகாம்

By

Published : Sep 5, 2020, 10:46 PM IST

சென்னையில் கரோனா வைரஸ் (தீநுண்மி) வட சென்னை பகுதிகளில் குறைந்து, தற்போது கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாகப் பரவிவருகிறது. இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. இன்று (செப்டம்பர் 5) 449 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 51 மருத்துவ முகாம்களும் தண்டயார்பேட்டையில் 49 மருத்துவ முகாம்களும் திருவிக நகரில் 41 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.

449 மருத்துவ முகாம்களில் மொத்தம் 19 ஆயிரத்து 964 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 1,089 நபர்கள் அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய்க்கு ஏற்ற மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மே 8ஆம் தேதிமுதல் இன்று (செப்டம்பர் 5) வரை மொத்தம் 43 ஆயிரத்து 18 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அதில் 22 லட்சத்து 90 ஆயிரத்து 629 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details