தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பி.இ. பி.டெக் படிப்பில் சேர 42 இடங்களில் சேர்க்கை சேவை மையம் - சென்னை

சென்னை: பி.இ., பி.டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு உதவி பெறுவதற்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் 42 இடங்களில் அமைக்கப்படுகிறது என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

tnea

By

Published : Apr 26, 2019, 9:53 AM IST

இளங்கலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கு மே 2ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு உதவி புரிவதற்காக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் 42 இடங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.

மாணவர்கள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். மேலும் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்தும் சேவை மையங்களிலேயே நடைபெறும்.

சேவை மையங்களின் விவரம்:

  1. சென்னை-தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லுாரி
  2. கடலுார்-விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலை அறிவியல் கல்லுாரி
  3. சிதம்பரம்-அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
  4. காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் பச்சையப்பா பெண்கள் கல்லுாரி,
  5. குரோம்பேட்டை ஐஆர்டி பாலிடெக்னிக் கல்லுாரி
  6. திருவள்ளூர்-ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் கல்லுாரி
  7. திருவண்ணாமலை-செய்யார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி
  8. வேலூர்-பாகாயம் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனம்
  9. விழுப்புரம்-சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி,
  10. திருக்கோவிலுார் அடுத்த அரகண்டநல்லுார் அரசு பாலிக்டெக்னிக் கல்லுாரி
  11. கோயம்புத்துார்-பீளமேடு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி,
  12. புதிய சித்தாப்பூர் பாரதியார் சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரி,
  13. கோயம்புத்தூர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
  14. தருமபுரி-தருமபுரி அரசு பொறியியல் கல்லுாரி
  15. ஈரோடு-சக்தி அரசு பாலிடெக்னிக் கல்லூரி,
  16. பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி
  17. கிருஷ்ணகிரி-பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரி
  18. நாமக்கல்-என்.கே.ஆர். அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி
  19. நீலகிரி-அரசு கலைக்கல்லுாரி
  20. சேலம்-அரசு பொறியியல் கல்லுாரி
  21. திருப்பூர்-சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி
  22. கரூர்-தாந்தோணிமலை அரசு கலை கல்லூரி
  23. மதுரை-ஜெய்ஹிந்த்புரம் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி,
  24. தியாகராஜர் பொறியியல் கல்லூரி
  25. ராமநாதபுரம்-இளையான்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி
  26. தேனி-போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி
  27. திண்டுக்கல்-ஜி.டி.என். அரசு கலைக்கல்லூரி
  28. அரியலுார்-கீழப்பாளூர் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி
  29. நாகப்பட்டினம்-வாலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லுாரி
  30. பெரம்பலூர்-அரசு பாலிடெக்னிக் கல்லுாரி
  31. புதுக்கோட்டை-அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி
  32. தஞ்சாவூர்-ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி,
  33. சிங்கப்பட்டி அரசு பொறியியல் கல்லுாரி
  34. திருச்சி-துவாக்குடிமலை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி,
  35. ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லுாரி
  36. திருவாரூர்-வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி
  37. சிவகங்கை-காரைக்குடி ஏ.சி. அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி
  38. கன்னியாகுமரி-கோட்டார் சவுத் தேவாங்கர் ஹிந்து கல்லூரி
  39. திருநெல்வேலி-திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லுாரி,
  40. காந்திநகர் ராணி அண்ணா அரசுப் பெண்கள் கல்லுாரி
  41. துாத்துக்குடி-பாளையங்கோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி
  42. விருதுநகர்-விவ வன்னியபெருமாள் பெண்கள் கல்லுாரி

ஆகிய இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details