தமிழ்நாட்டில் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. இதனால் அங்கு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் வீடு வீடாக ஆய்வு: இன்று மட்டும் 400 பேருக்கு சிறு பாதிப்புகள்! - சென்னை மாநகரத்தில் வீடு வீடாக கரோனா தொற்று குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இன்று சிறு பாதிப்புகள் உள்ள 400 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்
சென்னை மாநகரத்தில் வீடு வீடாக கரோனா தொற்று குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இன்று சிறு பாதிப்புகள் உள்ள 400 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தொற்று எதுவும் இல்லை எனவும் மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.
இந்நிலையில் கரோனா தொற்று குறித்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று நடத்தப்பட்ட ஆய்வில் 400 பேருக்கு சிறிய அளவில் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உறுதிசெய்துள்ளார்.
இவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று ஏதும் இல்லை என உறுதியாகியுள்ள நிலையில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் மாநகராட்சியிடம் தெரியப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.