தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

BEL நிறுவனத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை! - காலிப்பணியிடங்கள்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் Trainee Engineer பணியில் உள்ள 9 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

BEL நிறுவனத்தில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை..!
BEL நிறுவனத்தில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை..!

By

Published : Dec 15, 2022, 1:23 PM IST

காலிப்பணியிடங்கள்:

Trainee Engineer I - 9 பணியிடங்கள்

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc (Engg.) B.E / B. Tech படிப்புகளில் Information Technology / Information Science / Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication / Telecommunication / Communication / Electrical / Electrical & Electronics பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.01.2023 தேதியின்படி அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். SC & ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கபட்டுள்ளது.

சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.30,000 முதல் - ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் :

பொது, EWS மற்றும் OBC விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம்-ரூ.150 ரூபாயுடன் 18% GST சேர்த்து ரூ.177 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=WebADEnglish-5-12-22.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்தை Sr. DGM (HR/COMPS & EM), Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru - 560013 என்ற முகவரிக்கு 21.12.2022 தேதிக்குள் சென்றடையும் படி அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

இதையும் படிங்க:10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details