தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் அதிக கட்டணத்தைக் குறைக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், திமுக மாநிலங்களவை எம்.பி வில்சன் தமிழ்நாட்டில் சுங்கக் கட்டணம் குறைக்கப்படும் என தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று (நவ.19) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது பதிவில் "மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பொது நிதியுதவி திட்டங்களில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40% வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சாலைப்பயனாளர்களின் சுமையை குறைக்க உதவிடும் இந்த முடிவிற்காக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.