தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாண்டஸ் புயல் எதிரொலி - சென்னை விமான நிலையத்தில் 4 விமானங்கள் ரத்து! - மோசமான வானிலை

மாண்டஸ் புயல் எதிரொலியாக மோசமான வானிலை நிலவுவதால், சென்னை விமான நிலையத்தில் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல விமானங்கள் தாமதமான புறப்படுகின்றன.

Chennai
Chennai

By

Published : Dec 8, 2022, 5:30 PM IST

சென்னை:வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தமிழ்நாட்டை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று(டிச.8) காலையில் இருந்து சாரல் மழை பெய்து வருகிறது. காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக சுழன்று அடித்துக் கொண்டு இருக்கிறது.

இந்த மோசமான வானிலை காரணமாக சென்னையிலிருந்து தூத்துக்குடி, சீரடி செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் விமானமும், சீரடியில் இருந்து சென்னை வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதோடு சென்னையில் இருந்து மும்பை, மதுரை, தூத்துக்குடி, ஹுப்ளி, கண்ணூர், கோலாலம்பூர், சிங்கப்பூர், இலங்கை, டாக்கா ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் 11 விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில், மாண்டஸ் புயலை எதிர்கொள்வது தொடர்பாக உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் விமான பயணிகள், விமானங்களை பாதுகாப்பதற்காக, அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல விமான சேவைகள் ரத்தாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மாண்டஸ் புயலால் என்ன நடக்கும்? - வானிலை ஆய்வு மையத்தின் முழு தகவல்!

ABOUT THE AUTHOR

...view details