சென்னை : பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்ற ஆசிரியர்கள், திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிப். 28ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமாரை இன்று (மார்ச் 2) நேரில் சந்தித்து ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கையை தெரிவித்தனர். இதுகுறித்து, ஆசிரியர் புனிதா கூறுகையில், "திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.
ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேலும், ஏற்கனவே 2013ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும், வேலை கிடைக்காமல் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறோம்.
மீண்டும் புதிதாக தேர்வு எழுத கூறினால் தங்களால் முடியாது என தெரிவித்தனர். எனவே, ஆசிரியர் பணிக்கு மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என போடப்பட்ட அரசாணையை ரத்து செய்துவிட்டு தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். அரசு இதற்கான உறுதிமொழி அளிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பில் 'எம்ஜிஆர்' பாட்டு பாடியதால் சலசலப்பு!