சென்னை:தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 3 ஆயிரத்து 581 கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் ஆயிரத்து 344 நபர்கள், கோயம்புத்தூரில் 315 நபர்கள், செங்கல்பட்டில் 297 நபர்கள் என, அதிகபட்சமாக மாவட்டங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில், 21 ஆயிரத்து 958 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மக்கள் நல்வாழ்வுத் துறை ஏப்ரல் 4ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் புதிதாக 82 ஆயிரத்து 187 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 3ஆயிரத்து 562 நபர்கள், அமெரிக்காவிலிருந்து வந்த ஒருவர், தமிழ்நாட்டிற்கு மகாராஷ்டிராவிலிருந்து வந்த 5 நபர்கள், பங்களாதேஷ், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த தலா மூன்று நபர்கள், பிகார், ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த தலா இரண்டு நபர்கள், கர்நாடகாவிலிருந்து வந்த ஒருவர் என 3ஆயிரத்து 581 நபர்களுக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 96 லட்சத்து 6 ஆயிரத்து 156 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனை வாயிலாக, தமிழ்நாட்டிலிருந்து 8 லட்சத்து 99 ஆயிரத்து 807 நபர்கள் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டது.
தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாம்களில், 21 ஆயிரத்து 958 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகள் குணமடைந்து, ஆயிரத்து 813 பேர் வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் சிகிச்சைப் பலனின்றி தனியார், அரசு மருத்துவமனைகளில் தலா ஏழு நபர்கள் வீதம் 14 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 778 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
- கோயம்புத்தூர் - 60153
- செங்கல்பட்டு - 57509
- திருவள்ளூர் - 46768
- சேலம் - 33722
- காஞ்சிபுரம் - 31058
- கடலூர் - 25,959
- மதுரை - 22086
- வேலூர் - 21644
- தஞ்சாவூர் - 20244
- திருவண்ணாமலை - 19801
- திருப்பூர் - 19653
- கன்னியாகுமரி - 17677
- தேனி - 17353
- விருதுநகர் - 16941
- தூத்துக்குடி - 16628
- ராணிப்பேட்டை - 16563
- திருநெல்வேலி - 16311
- திருச்சிராப்பள்ளி - 16094
- விழுப்புரம் - 15609
- ஈரோடு - 15501
- நாமக்கல் - 12211
- திருவாரூர் - 12289
- திண்டுக்கல் - 12016
- புதுக்கோட்டை - 11959
- கள்ளக்குறிச்சி - 10991
- நாகப்பட்டினம் - 9414
- தென்காசி - 8802
- நீலகிரி - 8742
- கிருஷ்ணகிரி - 8637
- திருப்பத்தூர் - 7879
- சிவகங்கை - 7086
- தர்மபுரி - 6818
- ராமநாதபுரம் - 6594
- கரூர் - 5707
- அரியலூர் - 4845
- பெரம்பலூர் - 2321
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 976
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1058
- ரயில் மூலம் வந்தவர்கள் 428