சென்னை:பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு அறிக்கையில், ’தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 573 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 34 நபர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 6 கோடியே 52 லட்சத்து 53 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , 34 லட்சத்து 54 ஆயிரத்து 686 நபர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 324 பேர் மருத்துவமனைகளிலும் , தனிமைப்படுத்தும் மையங்களிலும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொது சுகாதாரத் துறை இயக்குநரக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது