சென்னை: தமிழக சட்டப் பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையில் 31 புதிய அறிவிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விபரங்கள் பின்வருமாறு...
1. புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மற்றும் உள் விளையாட்டரங்கங்களை உள்ளடக்கிய மாவட்ட விளையாட்டு வளாகங்கள் நிறுவப்படும்.
2. 2023ஆம் ஆண்டு கருணாநிதியின் நூற்றாண்டு பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் 42 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
3. சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கம் மற்றும் வேளச்சேரி நீச்சல் குள வளாகம் ஆகிய ஐந்து முக்கிய விளையாட்டரங்கங்கள் 25 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைத்து மேம்படுத்தப்படும்.
4. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு எலைட் திட்டம் மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் மிம்ஸ் ஆகிய திட்டங்களின் கீழ் வழங்கப்படும் சிறப்பு உதவி தொகை 25 லட்சத்திலிருந்து 30 லட்சமாகவும், பயனாளிகளின் எண்ணிக்கை 12ல் இருந்து 25ஆகவும் உயர்த்தப்படும்.
5. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் 10 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும்.
6. சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நவீன எல்இடி மின்விளக்கு வசதிகள் 9 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்படும்.
7. கோவில்பட்டியில் மாணவர்களுக்கான ஹாக்கி முதன்மை நிலை விளையாட்டு மையம் ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
8. மாநிலத்தில் பாரா விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் நாட்டிலேயே முதன் முறையாக 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கங்களில், பிரத்யேக பாரா விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும்.
9. சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் 3 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்படும்.
12. மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டுக்காக பொதுமக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து TN சாம்பியன்ஸ் அறக்கட்டளை அமைக்கப்படும்.
11. மாமல்லபுரத்தில் உலக சர்ஃபிங் லீக் போட்டிகள் நடத்துவதற்கு 2 கோடியே 68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
12. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக மகளிர் விடுதிக்கு ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும்.
13. 2023 சென்னை சுவாஸ் உலக கோப்பை நடத்துவதற்கு ஒரு கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
14. திருச்சி ஓலையூரில் தேசிய மாணவர் படை நிரந்தர பயிற்சி மையம் அமைக்க முதற்கட்டமாக ஒரு கோடி நிதி ஒதுக்கப்படும்.
15. ஈரோடு மாவட்டம் கரட்டுப்பாளையத்தில் உள்ள ஜிம்னாஸ்டிக் மையத்தில் விளையாட்டு விடுதி மற்றும் புதிய ஜிம்னாஸ்டிக் அரங்கம் ஒரு கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.