தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரியிலிருந்து 177.25 டி.எம்.சி தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்தல் - காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை

சென்னை: மாநிலத்திற்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாட்டின் சார்பாக காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 30th Meeting of the Cauvery Water Regulatory Commission held via video conferencing
30th Meeting of the Cauvery Water Regulatory Commission held via video conferencing

By

Published : Jul 14, 2020, 7:53 PM IST

காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 30ஆவது கூட்டம் இன்று (ஜூலை14) காணொலிக் காட்சி மூலம் குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் சார்பில் தலைமைச் செயலகத்திலிருந்து நீர்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளர் தி.எஸ்.ராமமூர்த்தி (உறுப்பினர்) , காவேரி தொழில் நுட்பக் குழுத்தலைவர் ஆர்.சுப்ரமணியன், துணைத் தலைவர் பட்டாபிராமன், திருச்சி உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர் .

தமிழ்நாடு அணைகளில் தற்பொழுது நீர்வரத்து, நீர் விநியோகம், நீர் இருப்பு போன்ற விபரங்களையும் புதுச்சேரி மாநிலத்திற்கு வழங்கப்பட்ட நீர் அளவு போன்றவற்றை எஸ்.ராமமூர்த்தி, கூட்டத்தில் தெரிவித்தார் .

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்சமயம் மழை பெய்து வருவதால் தமிழ்நாட்டிற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு தரவேண்டிய நீரை உடனே வழங்கிட வேண்டும். தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் ஒன்பது டி.எம்.சியும், ஜூலை மாதத்திற்கு 32 டி.எம்.சியும் தண்ணீர் தர வேண்டும். இதுநாள் வரையில் ஒன்பது டி.எம்.சி தண்ணீர் கிடைத்துள்ளது.

குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு அதிகளவு நீர் தேவைப்படுவதால் இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என மாநிலத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு மொத்தம் 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் அலுவலர்களும் தங்கள் மாநிலத்திற்கு தேவைப்படும் தண்ணீர் அளவு குறித்த புள்ளி விவரங்களை உரிய படிவத்தில் வழங்கி விளக்கம் அளித்தனர்

இவை அனைத்தையும் கேட்டறிந்த ஒழுங்காற்று குழுத் தலைவர், இக்குழு கூட்டத்தின் அறிக்கை காவேரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் பார்வைக்கு உடனே சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் மத்திய நதிநீர் ஆணையத்தின் தலைமை பொறியாளர் என்.எம்.கிருஷ்ணன் உன்னி, மத்திய தோட்டக்கலைத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீனிவாசன், கர்நாடகா சார்பில் காவேரி நீர்வாரி நிகாம் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் கே. ஜெயப்பிரகாஷ், கேரளா சார்பில் பொறியாளரும், பாண்டிச்சேரி சார்பில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் எஸ்.மகாலிங்கமும் கலந்துகொண்டனர் .

இதையும் படிங்க: விற்காமல் கிடக்கும் கோரைப் பாய்கள்... பயிரை நடலாமா? வேண்டாமா? - கலங்கும் காவிரி விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details