சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்கக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
அரசின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசும் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. மக்களும் கரோனா தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்திக் கொள்கின்றனர்.
கோவிஷீல்டு தடுப்பூசிகள்
இன்று (ஆக.7) புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 27 பார்சல்களில் 3 லட்சத்து 27 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. சென்னை விமானநிலைய அலுவலர்கள் தடுப்பூசி பாா்சல்களை தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனா்.
3 லட்சத்து 24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன அவா்கள் குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா். அங்கிருந்து மாவட்டங்களின் தடுப்பூசி தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சிங்கிள் டோஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல்