தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3.38 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கல்!

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், 3 லட்சத்து 38 ஆயிரத்து 512 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

By

Published : Aug 25, 2021, 3:11 PM IST

குடும்ப அட்டைகள்
குடும்ப அட்டைகள்

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றது. அதன் பின்னர் திமுக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள குடும்ப அட்டைகள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள், தற்போது உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில், “3 லட்சத்து 38 ஆயிரத்து 512 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜுலை 31ஆம் தேதிவரை, 93 லட்சத்து 23 ஆயிரத்து 734 அரிசி உள்ளிட்ட அனைத்து பொருள்களும் முன்னுரிமையின் அடிப்படையில் வழங்கப்படும் குடும்ப அட்டைகள் உள்ளன.

2.13 கோடி குடும்ப அட்டைகள் பயன்பெறல்

அந்தியோதயா அன்னயோசனா திட்டத்தின் கீழ் 18 லட்சத்து 63 ஆயிரத்து 77 குடும்ப அட்டைகள் பயன்பெறுகின்றன.

இதே போன்று 97 லட்சத்து 53 ஆயிரத்து 532 அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள், 3 லட்சத்து 84 ஆயிரத்து 476 சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள், 55 ஆயிரத்து 293 எந்த பொருளும் இல்லாத குடும்ப அட்டைகள் என மொத்தம் 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் உள்ளன.

மாநிலத்தில் தனியாக அல்லது குடும்பமாக வசித்து வரும் திருநங்கைகளுக்கு, கடந்த ஜூலை 31ஆம் தேதி வரை 2 ஆயிரத்5து 950 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொது விநியோகத்திட்ட மானியமாக ரூ. 400 கோடி ரூபாய் விடுவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details