தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கம் கடத்தல்; 2 இலங்கைப் பெண்கள் உட்பட 3 பேர் கைது - 3 arrested including 2 Sri Lankan women

சென்னைக்கு துபாய், இலங்கை விமானங்களில் தங்கம் கடத்தி வந்த 2 இலங்கை பெண்கள் உட்பட 3 பேரை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 22, 2023, 8:27 PM IST

சென்னை:இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (ஜன.22) வந்த விமானப் பயணிகளிடம் சுங்கத்துறையின் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கையைச் சேர்ந்த 2 பெண்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து பெண் சுங்க அதிகாரிகள், இலங்கை பெண் பயணிகளை தீவிரமாக சோதனை இட்டனர். அதோடு அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று, முழுமையாக சோதித்த போது, அவர்களுடைய ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 4 சிறிய பார்சல்களை கைப்பற்றினர். அவர்களை பிரித்து பார்த்தபோது, உள்ளே தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்தனர். 4 பார்சல்களிலும், 859 கிராம் தங்க பசை இருந்தது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் தங்கப் பசையை பறிமுதல் செய்ததோடு, 2 இலங்கை பெண் பயணிகளையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவருடைய உடைமைகளை சோதனையிட்டனர்.

பின்பு தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதித்தபோது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த, 2 பார்சல்களில் 378 கிராம் தங்க பசை மற்றும் 89 கிராம் தங்க செயின் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அதையும் பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அந்தப் பயணியையும் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனைகளில், அடுத்தடுத்து இலங்கை, துபாய் நாடுகளில் இருந்து வந்த 2 விமானங்களில் 2 இலங்கை பெண்கள் உட்பட 3 பயணிகளை சுங்க அதிகாரிகள் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.66.5 லட்சம் மதிப்புடைய 1.33 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, மேலும் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பு; கைதான நபர்களிடம் என்ஐஏ மீண்டும் விசாரணை?

ABOUT THE AUTHOR

...view details