தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை: 3 பேர் கைது - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

3 பேர் கைது
3 பேர் கைது

By

Published : Apr 30, 2021, 10:30 PM IST

சென்னை ஐசிஎப் பகுதியில் ரெம்டெசிவிர் மருந்தை தனியார் நிறுவன ஊழியர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக திருவல்லிக்கேணி மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர் முரளி கிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து முரளி கிருஷ்ணன் ஐசிஎப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து காவலர் சுரேஷ் என்பவர் அந்த ஊழியருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரசமாக மருந்து வேண்டும் எனக் கேட்டார்.

அதனை நம்பி அந்த ஊழியர் இன்று (ஏப்ரல்.30) மதியம் ரெம்டெசிவிர் மருந்துடன் ஐசிஎப் வடக்கு காலனி கமல விநாயகர் கோயில் அருகே வந்தார். பின்னர் காவலர் சுரேஷிடம் மருந்தை 30 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ஐசிஎப் உதவி ஆய்வாளர் மகேஷ் தலைமையிலான காவல் துறையினர் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வில்லிவாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவைச் சேரந்த கார்த்திகேயன் (33). 10 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு சென்னை மின்ட் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

1,500 ரூபாய் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் 15,000 ரூபாய் வரை விற்று வந்தது தெரியவந்தது. தொடர்ந்து கார்த்திகேயனை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்து 8 ரெம்டெசிவிர் மருந்தை பறிமுதல் செய்தனர்.

கார்த்திகேயன் அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரக்கூடிய ஜாபர் என்பவரின் ஆலோசனையின் பேரில் மருந்தை விற்று வந்ததாக வாக்குமூலம் அளித்தார். அதனடிப்படையில் ஜாபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதேபோல் புரசைவாக்கம் தானா தெருவில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்து வந்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சாம்பசிவம் (46), ராமன் (29) ஆகிய இருவரை வேப்பேரி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை

இது குறித்து மருந்துகள் ஆய்வாளர் முரளி கிருஷ்ணன் கூறும்போது, "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு குறைந்த விலையில் ரெம்டெசிவிர் மருந்தினை வழங்கி வருகிறது. சிலர் பொய்யான சான்றிதழை தயாரித்து மருந்தை வாங்கி கள்ளச்சந்தையில் கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர். கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்வது தெரிந்தால் தமிழ்நாடு மருந்து கட்டுபாட்டு வலைதளத்திற்கு (www.tndrugscontrol.gov.in) பொதுமக்கள் புகார் அளிக்கலாம்" என்றார்.

இதையும் படிங்க: சேலம் அரசு மருத்துவமனையில் காலாவதியான ரெம்டெசிவிர்?

ABOUT THE AUTHOR

...view details