சென்னை:சென்னை மெரினா கடலில் மூழ்கிய சிறுவனை ஹெலிகாப்டரில் தேடும்பணி இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.கோடம்பாக்கம் அரசுப் பள்ளியில் படித்து வரும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் கடந்த ஆகஸ்டு 19ஆம் தேதி மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர். பின்னர் அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் பின்புறம் உள்ள கடற்பகுதியில் அந்த மூவரும் குளித்துள்ளனர்.
அப்போது 3 மாணவர்களையும் கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் கூச்சலிடவே, அப்பகுதியிலிருந்த கடலோர பாதுகாப்பு குழுமத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் முருகானந்தன், அரவாணன் ஆகியோர் கடலில் குதித்து 2 மாணவர்களைக் காப்பாற்றினர். ஒரு மாணவனைக் காப்பாற்ற முடியவில்லை. கடலில் மூழ்கினான்.
இதையும் படிங்க: சந்திரனை சந்தித்த மனிதர்கள்..! இஸ்ரோ மனிதர்களை நிலவிற்கு அனுப்புவது எப்போது?
தகவலறிந்து மெரினா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காப்பாற்றப்பட்ட 2 மாணவர்களையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் கடலில் மூழ்கிய மாணவன் அருள் என்பது தெரியவந்தது. மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடலில் மூழ்கிய மாணவனைத் தேடும் பணியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.