தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டுறவுத் துறையில் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை!

கூட்டுறவுத் துறையின் சார்பில் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் தேர்வான 293 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதில், ஒன்பது பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமன ஆணை வழங்கினார்.

cm palanisamy
cm palanisamy

By

Published : Jan 9, 2021, 8:02 PM IST

கூட்டுறவுத் துறையின் சார்பில் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலமாக 293 உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,ஒன்பது பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்து தொடங்கிவைத்தார்.

இதையடுத்து, தேர்வு செய்யப்பட்டுள்ள 293 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, தலைமைச் செயலர் சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் செயலரும் - கூடுதல் தலைமைச் செயலருமான தயானந்த் கட்டாரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:சிறைக் கைதிகளை உறவினர்கள் நேரில் காண ஜன. 14 முதல் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details