தமிழ்நாட்டில் கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 1,520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாக காவல் துறையினர், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் என குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். நாடு முழுவதும் செய்தி சேகரிக்கச் செல்லும் செய்தியாளர்களுக்கும், தொலைக்காட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் 27 பேருக்கு கரோனா தொற்று; அலுவலகம் தற்காலிக மூடல் - பிரபல தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் 27 பேருக்கு கரோனா தொற்று
சென்னை: ராயபுரத்தில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் 27 ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்த அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
அந்த வகையில் சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி ஊழியர் ஒருவருக்கும், மயிலாப்பூரில் செயல்படும் அச்சு ஊடகச் செய்தியாளர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியரின் அலுவலகத்தில் பணிபுரியும் மற்றவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 27 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபருடன் யார் யார் தொடர்பில் இருந்தனர், எங்கிருந்து தொற்று பரவியது போன்ற காரணங்களை மருத்துவ அலுவலர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மற்றவர்கள் வேறொரு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல சென்னை உயர் நீதிமன்றத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியரின் குடியிருப்பு வளாகத்தில் பரிசோதனை செய்ததில் அங்கே ஏழு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு தற்போது இரண்டாவது நிலையில் இருந்து மூன்றாவது நிலையான சமூகப் பரவலை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரம் தெரிவிக்கின்றது.