சென்னை: சட்டப்பேரவையில் இன்று நடந்த உயர் கல்வித்துறை மானிய விவாதத்தில், அமைச்சர் பொன்முடி 27 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு,
- அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் 4ஆயிரத்து 800 மாணவர்கள், 500 ஆராய்ச்சியாளர்களுக்கு 19.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விடுதிகள் கட்டப்படும்.
- பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை மாணவிகளுக்கு இரண்டு விடுதிகள் 22. 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
- அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் மாணவியர்களுக்கான 49.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதி கட்டப்படும்.
- சென்னை பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில், நவீன வசதிகளுடன் புதிய விடுதிகள் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
- பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் மகளிர் விடுதி, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
- அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொண்டி வளாகத்தில் கடல்சார் விளையாட்டு மையம் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- அண்ணா பல்கலைக்கத்தில் 11 மையங்கள் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
- அண்ணா பல்கலைக்கழக மாணாக்கர்களின் தொழில் திறன்களை மேம்படுத்த புதிய பாடப்பிரிவு 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும்.
- தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு பணிபுரிந்துகொண்டே பொறியியல் பட்டம் பயில்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகளில், நேரடி இரண்டாம் ஆண்டு மாணாக்கர் சேர்க்கை அறிமுகப்படுத்தப்படும்.
- அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பூங்கா 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும். இதன் மூலம் 20ஆயிரம் இளநிலை முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்கள் பயன்பெறுவர்.
- தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறைக்கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும்.
- 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்புகள் தொடங்கப்படும்.
- 16 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கட்டடங்கள் கட்டப்படும்.
- செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணக்கர்களுக்காக முதுகலை வணிகவியல் பாடப்பிரிவு சென்னை மாநிலக்கல்லூரியில் தொடங்கப்படும்.
- புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் புதிய நூலகக் கட்டணம் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
- 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 166.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
- பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது, பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்படும்.
- அரசு கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். (முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் செலவீனத்தில் 26 அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் 55 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆய்வகங்கள், வகுப்பறைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்)
- அரசு கல்லூரிகளில் ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்படும்.
- 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப்படும்.
- 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் அயல்நாட்டு மொழிகள் மையம் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
- தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக்கழகத்தை மேம்படுத்த 5 கோடி ரூபாய் அரசால் வழங்கப்படும்.
- உலகத்திறன் அகாடமி மற்றும் நவீன தொழில்நுட்ப உற்பத்தி மையம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகளில் அமைக்கப்படும்.
- புத்தாக்கம் மற்றும் புதிய தொழில் நுட்பத்திறன்களை மாணவர்களுக்கு வழங்குவதற்காக, ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் புரோடோசெம் என்ற 18 வரை புத்தாக்கப்பாடப்பிரிவு, மதுரை அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.
- அரசு பொறியியல் மற்றும் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளை ஒருங்கிணைந்து நிர்வகிக்கும் பொருட்டு திட்ட கண்காணிப்பு மையம் 14.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். முதல் தலைமுறை பட்டதாரி கல்வி கட்டணச்சலுகை, 7.5 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உள்ஒதுக்கீடு, போஸ்ட் மெட்ரிக் கல்விக் கட்டணச்சலுகை ஆகிய திட்டங்களை கண்காணிப்பதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் உதவி புரியும்.
- தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களின் திறமையை மேம்படுத்த அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆடை வடிவமைப்பு, வேளாண்மை பொறியியல், இயந்திர மின்னணுவியல், தளவாட தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் பொறியியல் போன்ற புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்.