சென்னை: துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (ஜூன் 30) வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் வழக்கம்போல் சோதனையிட்டனர். அப்போது, சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த சிக்கந்தர் (29) என்ற பயணியின் மீது சுங்க அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் அவரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனையடுத்து அவர் மீதான சந்தேகம் மேலும் வலுத்தது. எனவே, அவருடைய உடமைகள் அனைத்தையும் சுங்க அலுவலர்கள் சோதனையிட்டனர். அதில், அவருடைய சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விலை உயா்ந்த செல்போன்கள் உள்ளிட்ட மின்சாதனப்பொருட்கள், வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சிகரெட்கள் ஆகியவை இருந்தன.