தமிழகத்தில் வரும் மே 19ஆம் தேதி அன்று 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
திமுகவுக்கு ஆதரவு - அதிமுக நிர்வாகிகள் இருவர் கட்சியிலிருந்து நீக்கம்! - திமுக
இடைத்தேர்தலையடுத்து ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக நிர்வாகிகள் இருவர் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக சார்பில் அதிமுக நிர்வாகிகள் இருவரை நீக்கியுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகத்தின் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் :
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு எதிராகவும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாகவும் கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாகவும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளவேலங்கால் ஊராட்சி மன்ற செயலாளர் முருகேசன் மற்றும் அயிரவன்பட்டி கிளை செயலாளர் சாவித்திரி ஆகியோரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விடுவிப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.