தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 23 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன - மாநகராட்சி தகவல் - சென்னை கரோனா நிலவரம்

சென்னை: மே மாதம் முதல் தற்போது வரை 23 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

mc
mc

By

Published : Jul 27, 2020, 6:21 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, சென்னையில் தண்டையார்பேட்டை, திருவிக நகர், அண்ணா நகர் போன்ற இடங்களில் கரோனா தொற்று அதிகமாகப் பரவிவருகிறது. ஆனால், குணமடைந்தவரின் விழுக்காடும் அதற்கு சரி சமமாக உள்ளது. இந்த தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் தினந்தோறும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, தினந்தோறும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மே 8ஆம் தேதி முதல் நேற்று (ஜூலை 26) வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 23 ஆயிரத்து 64 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில், இதுவரை 13 லட்சத்து 75 ஆயிரத்து 743 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ முகாம்கள் மூலம் கரோனா பாதித்த 14 ஆயிரத்து 311 நபர்களை மாநகராட்சி கண்டுபிடித்துள்ளது.

மேலும், நேற்று ஒரே நாளில் சென்னை மாநகராட்சி முழுவதும் 433 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில், அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 55 மருத்துவ முகாம்களும், தண்டையார்பேட்டை மற்றும் திருவிக நகரில் 44 மருத்துவ முகாம்களும், ராயபுரத்தில் 42 மருத்துவ முகாம்களும் நடைபெற்றுள்ளன. நேற்றையை முகாம்களில் பரிசோதனை மேற்கொண்ட 16 ஆயிரத்து 394 நபர்களில் 1,415 பேருக்கு தொற்று அறிகுறி இருந்ததால் கரோனா பரிசோதனை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க:கோவையில் இன்று 220 பேருக்கு கரோனா !

ABOUT THE AUTHOR

...view details