கரோனா பரவலைத் தடுப்பதற்கு சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் தினமும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை சார்பாக மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. அதன்படி, 510 மருத்துவ முகாம்கள் இன்று (ஆகஸ்ட் 1) நடைபெற்றன. இதில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 60, அண்ணா நகரில் 55 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.
இவற்றின் மூலம் 22 ஆயிரத்து 693 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் ஆயிரத்து 829 நபர்களுக்கு சிறு அறிகுறி இருந்ததால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நாள்தோறும் நடைபெறும் மருத்துவ முகாமை அமைச்சர்கள், சுகாதாரத் துறைச் செயலர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.